தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்டத்தி லுள்ள நீர் வழங்கல் திட்ட நிலையங்களில் பணியாற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள், மானி வாசிப்பு பரிசேதகர் மற்றும் மானி வாசிப்பாளர்கள் ஆகியோரின் வினைத்திறனை மேன்படுத்துவதற்கான ஒரு நாள் விஷேட செயலமர்வொன்று கடந்த செவ்வாக் கிழமை நடைபெற்ற.
து
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் வி.வினோதன் தலைமையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மடடக்களப்பு மாவட்ட பிராந்திய அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இச்செயலமர்வு இடம் பெற்றது.
இதில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் என்.சுதேசன் வணிக முகாமையாளர் ஜே.எம்.விஜிதே மற்றும் உள்ளக கணக்காய்வாளர் எச்.எம்.எஸ்.குமாரே ஆகியோர் கலந்து கொண்டு விரிவாக விளக்கங்களை வழங்கியிருந்தனர்.
இச்செயலமர்வில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையி ன் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில் பணியாற்றும் இதனோடு தொடர்புபட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment