எதிர் வருகின்ற நாடாளுமன்ற பொதுத் தேத்தலில் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கும் பட்சத்தில் நாம், அமையவிருக்கின்ற புதிய அரசில் பார்வையாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக மாறலாம். எனவே நடைபெறவிருக்கின்ற தேர்தல் தமிழ் மக்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையப் போகின்றது.
பட்டிருப்புத் தேர்தல் தொகுதியிலிருந்து மாத்திரம் சுமார் 25000 வாக்குகளையாவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எமது மக்கள் வழங்கு வார்களேயானால் மாவட்டத்தில் ஏனைய தொகுதிகளிலிருந்தும் கிடைக்கப்பெறும் வாக்குளையெல்லாம் ஒன்றிணைத்து மாவட்த்தில் 2 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சிய பெறலாம். இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். அதுபோல் தமிழ் மக்களும் வாக்களித்தால் எதிகாலத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி பாரிய முன்னேற்றத்தை அடைந்து கொண்டு செல்லும். என முன்னாள் பிரதி அமைச்சரும். ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமான சோ.கணேசமூர்தி தெரிவித்தார்.
ஞாயிற்றுக் கிழமை (19) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
அமையவிருக்கின்ற புதிய நாடாளுமன்ற அமர்வில் அரசாங்கத்தின் பக்கம் எமது மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக தமிழ் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் எமது மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு பெறலாம், இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தலாம்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது மாவட்டத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை எமது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு எதையும் சாதிக்க முடியாது. ஆளும் கட்சியிலிருந்தால்தான் மாவட்டத்தையே முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.
திறந்த மனதுடன் மக்களுக்குச் சேவைசெய்யக் கூடிய திறமைசாலிகளை மக்கள் நாடாளுமன்றத்திற்குகத் தெரிவு செய்ய வேண்டும்.
நான் அரசியலை வியாபாராமாக மேற்கொள்ளவில்லை நான் நேர்மையாக அரசியல் செய்பவன். என்னால் பல இளைஞர் யுவதிகள் அரச வேலைவாய்ப்புப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் நான் அமைச்சராக இருந்த காலத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுள்ளேன்.
ஓகஸ்ட் 17 இற்குப் பின்னர் ரணில் விக்கிரம சிங்கதான் மீண்டும் பிரதமராக நிறைவேற்று அதிகாரத்துடன், பதவியேற்கவுள்ளார். ரணில் விக்கிரம சிங்க கறைபடிதாய நேர்மையான ஒரு அரசியல்வாதி அவர் குடும்ப அரசியல் செய்யவில்லை.
எனவே தற்போது நடைபெறவிருக்கின்ற தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இந்த தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குக்கள் அனைத்தும் இந்த மாட்டத்தின் வறுமை, ஒழிப்பு, வேலைவாய்ப்குபு, அபிவிருத்தி போன்றவற்றிற்கு, அடித்தளமாக அமையும்.
ஐக்கிய தேசிக் கட்சியை மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் விரும்புவதன் காரணமாகத்தான் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலைவீசுகின்றது. கருனா, பிள்ளையான் ஆகியோருக்குக் கீழிருந்து நான் வேலை செய்ய முடியாது அதன் காரணமாகத்தான் கடந்தமுறை இங்கிருந்து வெளியேறினேன் தற்போது ஒரு நல்ல சூழல் உருவாகியுள்ளது. அதனடிப்படையிலதான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மாற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றேன் என அவர் தெரிவித்தார்.
3 Comments:
Post a Comment