பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற மட். களுதாவளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலைச் சமூகமும், களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகமும் இணைந்து பாராட்டு விழா ஒன்றினை மட்.களுதாவளை மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் புதன் கிழமை (08) நடாத்தினர்.
கடந்த யூன் மாதம், 12 ஆம் திகதி தொடக்கம், 15 ஆம் திகதிவரை, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு- பட்டிருப்பு கல்வி வலயம் 264 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.
இதில் வலய மட்டத்திலும் மாணாக மட்டத்திலும் 110 புள்ளிகளைப் பெற்று மட்ட களுதாவளை மகாவித்தியாலயம் முதலிடம் பெற்றுக் கொண்டது.
வித்தியாலய அதிபர் எஸ்.அலோசியஸ், தலைமையில் நடைபெற்ற இப்பாராட்டு நிகழ்வில், மட்டக்கள்பபு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, கிழக்கு மாகாண முன்னாள் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எஸ்.மனோகரன், மட்டக்களப்பு கச்சேரியின் பிரதம கணக்காளர் ச.நேசராசா, மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் க.ஜெகநாதன், பட்டிருப்புக் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களதான க.ஜீவநாதன், போ.காப்தீபன், உட்பட பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், கெனடி விளையாடடுக் கழக அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டினர்.
இதன்போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களுக்கும் வெற்றிக் கேடயங்களும், பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment