இந்த நாட்டில் இனங்களுக்கிடையேயான ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைத்தது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியே. அதனால்தான் கடந்த 30 வருடங்களாக அங்கத்தவராக செயற்பட்டு வந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டேன், என முன்னாள் அமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சிதான். 13வது திருத்தத்தைக் கொண்டு வந்ததே அக்கட்சிதான். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்விற்கான எந்தவித நடவடிக்கைகளையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுக்கவில்லை.
எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்கின்றபோது 13க்கும் மேல் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment