திருகோணமலை, கந்தளாய் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை வேளையில் பாம்பு தீண்டி ஒருவர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வயலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த ஜெயதிலக்க அப்புகாமி (வயது 68) என்ற விவசாயியை பாம்பு தீண்டியது. இதனைத் தொடர்ந்து இவரை கந்தளாய் தள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது, வழியில் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment