தமிழர் ஆண்ட மண்ணிலே நாங்கள் தொடர்ந்தும் அடிமையாக வாழ முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கிரான் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எங்களுக்கான பூரண சுதந்திரம் கிடைக்க வேண்டும். அரசியல் உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட எமது உறவுகள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள்.
அவர்கள் எந்த நோக்கத்திற்காக உயிர் தியாகம் செய்தார்களோ அதை நிறைவேற்றுவதற்காக நாங்கள் எதிர்கட்சியிலிருந்து குரல் கொடுப்பதுடன் எங்களால் இயன்ற சேவையாற்றி வருகின்றோம்.
நாங்கள் நினைத்திருந்தால் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவி பெற்று சுகபோக வாழ்க்கை அனுபவித்திருக்கலாம். ஆனால் நாங்கள் போகவில்லை.
“நக்குண்டான் நாவிழந்தான்” நாங்கள் அமைச்சு பதவி பெற்றிருந்தால் நான் வாழைச்சேனையில் கோடிஸ்வரனாக இருக்கலாம் ஆனால் அதற்கு நான் தயாராக இல்லை.
எனக்கு எனது மக்கள் வாக்களித்தது எனது குடும்பமோ அல்லது நானோ உழைத்து செல்வந்தனாக வாழ்வதற்காக அல்ல.
இந்த மண்ணில் எமது மக்கள் எதற்காக உயிர் தியாகம் செய்தார்களோ அதை நிறைவேற்ற பாடுபடுவேன் என்பதற்காக தான் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள்.
அதைக் காப்பாற்றுவதற்காக இன்று வரை நான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
எங்களுக்கு வருடத்துக்கு ஐம்பது இலட்சம் ரூபாய் மாத்திரமே தருவார்கள் மக்களின் அபிவிருத்தி வேலை செய்வதற்காக அந்தப் பணத்தை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதிலும் பங்கிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
2 Comments:
கள்ளச் சனியன் கருனாவுக்கு மாலை போட்டு கொண்டாடிய பிறகு இப்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியா? நான் உனக்கு போட்ட வாக்குக்கு நீ என்ன செய்தாய்? பாராளுமன்றத்துக்கு சென்றது உன் வங்கில் காசு சேர்க்கத்தானே? கணேசமூர்த்தி ஐயா போல் அபிவிருத்தி செய்த ஒரு நேர்மையான தலைவனை உன் கட்சியில் காட்டு பாப்பம்? என்ட வீட்ட வந்தால் செருப்பால் கன்னத்தில் அடிப்பேன்.
Post a Comment