அம்பாறை, பக்கிஎல்ல - வெல்லாவெளி வீதிக்கு அருகில் குழாய்நீர் விநியோகத்துக்காக அகழி தோண்டிக் கொண்டிருந்தபோது, மோட்டார் குண்டொன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டதாக பக்கிஎல்ல  பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் படையினரின் உதவியுடன் மோட்டார் குண்டு மீட்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 Comments:
Post a Comment