நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட 15 அரசியல் கட்சிகளும் 06 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளன என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான என்.ஏ.ஏ. புஷ்பகுமார தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர் திருமலை மாவட்டத்தில் இம்முறை 8 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள போதிலும் இவற்றுள் 2 சுயேட்சை குழுக்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு 06 சுயேட்சைக்குழுக்களே போட்டியிடவுள்ளன என்றார். இம்முறை பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக 256,855 பேர் தகுதி பெற்றுள்ளார்கள். அதேபோன்று 285 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
போனஸ் ஆசனத்தையும் சேர்த்து 04 உறுப்பினர்கள் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ளார்கள். தேர்தல் விதிமுறைகளை மீறுவோருகெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலீஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment