சர்வதேச மது எதிர்பு தினத்தை முன்னிட்டு இன்று புதன் கிழமை (10) மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதச செயலகத்தின் முன்னால் விழிப்புணர்வு நிகழ்வொன்று நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பிரதேச திவிநெகும அபிவிருத்தி உத்தயோகஸ்தர்கள், பரதேச செயலக அதிகாரிகள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது எமது சிறார்களின் சூழலை மதுசாரம் மற்றும், சிகரட் புகையிலிருந்து பாதுகாப்போம், போதைப் பொருளை ஒழித்து வாழ்வினை எழுச்சி பெறச் செய்வோம், உங்கள் புகைத்தல் குழந்தைகளுக்கு நோய் பாதிக்கும், புகைத்தல் உடல் நலத்திற்குக் கேடு, போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு வழிப்புணர்வில் ஈ:டுபட்டனர்.
இதப்போது கருத்து தெரிவித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 65 இற்கு மேற்பட்ட மது விற்பனை நிலையங்கள் இருக்கின்றன இதனை 30 ஆகக் குறைக்க வேண்டும், என்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப் பட்டுள்ளன. எனவே அரச உத்தியோகஸ்தர்கள், மற்றும் பொதுமக்களும் ஒன்றிணைந்து மதுவை ஒழிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எமது பிரதேசத்தில் மதுவை ஒழித்து மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் காண்பதற்கு திவிநெகும திணைககளமும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும், முன்னின்று செயற்படும். என அவர் மேலும் தெரிவித்தார்

0 Comments:
Post a Comment