3 May 2015

ஒரு நாட்டின் பல விடையங்களைத் தீர்மானிக்கின்ற சக்தியாக இளைஞர் யுவத்திகள்தான் திகழ்கின்றார்கள் - அரியநேத்தின்.

SHARE
இளைஞர்களுக்குரிய அபிவிருத்தி தொடர்பாகவும், விளையாட்டுக்களும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இளைஞர்களும் எதிர் காலத்தில் செயலாற்றுபவர்களாகவும், பக்குவமுடையவர்களாகவும் மாறவேண்டும்.

ஒரு நாட்டின் பல விடையங்களைத் தீர்மானிக்கின்ற சக்தியாக இளைஞர் யுவத்திகள்தான் திகழ்கின்றார்கள். நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் முhற்றக் கூடிய மனோ பக்குவமும், இளைஞர்களிடம்தான் இருக்கின்றது. கடந்த காலத்தில் பல இன்னல்களையும், நெருக்கடிக்ளையும், தாக்குதல்களையும் சந்தித்தவர்கள் இளைஞர்கள்தான். தற்போது ஆட்சிமாற்றம், வந்துள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து ஒருசில விடையங்களை மேற்கொண்டு வருகின்றது.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச் செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கோப் (ர்ழுPநு) கனவு  காண்பிப்பதற்கல்ல வழிகாட்டுவதற்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு  சனிக்கிழமை (02) மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்……


ஆட்சிய மாற்றம் ஏற்பட்டு 109 நட்கள் நகர்ந்துள்ளன. இக்கால கட்டத்திற்குள்ளதான் அரச திணைக்களங்களும் தமிழ் தேசியக் கூடமைப்பை நிகழ்வுகளுக்கு அழைக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.  109 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த அடிப்படை விடையங்கள் இன்றும் செய்து கொடுக்கப் படவில்லை.

தற்போது இங்குள்ள இளைஞர்கள் விளையாடுகின்றர்கள் இங்கு விளையாடுகின்ற இளைஞர்களுக்குச் சமமான இளைஞர்கள் சிறைச்சாலையிலே வாடடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில்தான் இந்த ஆட்சி மாறிய அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்னும் எமக்கு இந்த அரசாங்கத்துடன் இனைந்து செயற்படும் நிலையான வாய்ப்பு இல்லமலிருக்கின்றது.

அபிவிருத்தியை யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் கடந்த 65 வருட காலமாக தெடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின், பிரச்சனைகுரிய தீர்வு கிட்டும்வரை எமது அரசியல் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

எனவே தற்கால இளைஞர் யுவதிகள் திறந்த மனதுடனும், தூய்மையானவர்களாகவும், எமது மண் மீது பற்றுள்ளவர்களாகவும் மாறவேண்டும்.

யுத்தம் நிறைவுற்ற தற்போதைய நிலையிலும் மதுபாவனை அதிகரித்த மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இளையர்களை நல்வழிப்படுத்த நாங்கள் முயலும்போது மதுபான சாலைகள்  தீயவற்றை தூண்டும் நடவடிக்கயில் ஈடுபடுகின்றன. எனவே இளைஞர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, மனோ நிலையில் மபாற்றத்தைக் கொண்டுவந்து,  இந்த நாட்டிலே சிறந்த பிரஜைகளாக மாறவேண்டும். என அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: