மட்டக்களப்பு மண்டூரில் அப்பாவித் தமிழ் மகன் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். இச்செயற்பாடானது, தற்போதைய காலகட்டத்தில் பொருந்தாத செயலாகும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிஷ்ணபிள்ளை தெரிவித்தார்
மட்டக்களப்பு மண்டூரில் 43 வயதுடைய சத்தியானந்தன் மதிதயன் என்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவர் செவ்வாய்க் கிழமை முற்பகல் வீட்டில் இருந்தபோது
இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்ப்பாகிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிழந்தவரின் சடலத்தை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பார்த்துவிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்....
கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த நாட்டில் ஒரு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் இந்த நல்லாட்சியைக் குழப்புவதற்கென சில தீயசக்திகள் உருவெடுத்துள்ளார்கள்.
வடக்கிலே வித்தியாவின் படுகொலை நடைபெற்று இரண்டு வாரகாலம் முடிவதற்குள் மட்டக்களப்பில் இத்துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மக்களை பழையபடி அச்சத்திற்குள்ளும், பீதிக்குள்ளும் தள்ளும் நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலை முடிவுக்குக் கொண்டு வரப்படல் வேண்டும்.
இந்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நல்லாட்சிக்கு அவமானம் விளைவிக்கின்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரிகளைக் துப்பறிந்து கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும். இவ்வாறான குற்றச் செயல்களை மேற்கொள்கின்றவர்கள் யார் என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதும் அனைவரினதும் கடமை என்பதோடு நாட்டின் அரசாங்கமே இதற்கு வகைகூற வேண்டும். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment