மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணைக் கிராமத்தில் 'சோள இளவரசி சீர்பாத தேவி' சிற்றரசியின் சிலை துறைநீலாவணைக் கிராம இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் திங்கட் கிழமை மாலை (25) திறந்து வைக்கப்பட்டது.
துறைநீலாவணை இளைஞர் அமைப்பின் தலைவர் எம்.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினளர் ரி.கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டு 'சோள இளவரசி சீர்பாத தேவி' சிற்றரசியின் சிலையினைத் திறந்து வைத்தனர்.
0 Comments:
Post a Comment