மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் கிராமத்தில் நேற்று செவ்வாய் கிழமை இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரதேச செயலகத்தில் சமூக சேவை உத்தியோகஸ்தராகக் கடமை புரியும் ஒருவர் உயிரிழந்துள்ளார்
நேற்று காலை 10.30 மணியளவில குறித்த நபர் அவரது வீட்டில் இருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்தாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...
செவ்வாய் கிழமை காலை தமது குடும்பத்தாருடன் மண்டூரில் உள்ள அவரது வீட்டிலிருந்து உரையாடிக் கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த நபரின் தலையின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூகசேவை உத்தியோகஸ்தராக கடமை புரிந்துவரும் 43 வயதுடைய குடும்பஸ்தரான சத்தியானந்தன் மதிதயன் என்பவரே மேற்படி துப்ப்பாகிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபரின் தலையின் பின்புறத்தில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் முன்னரே உயிரிழந்துள்ளளர். என களுவாஞ்சிகுடி ஆதார வைத்திசாலையின் வைத்திய அத்தியட்சகள் கு.சுகுணன் தெரரிவித்தார்.
இச்சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளிப் பொலிசார் துரித விசாரணைகளை முன்நெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment