போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்களுக்காக வருடந்த பொதுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை (07) தும்பங்கோணியில் அமைந்துள்ள கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச கல்நடை வைத்திய அதிகாரி எம்.என்.நஸீர், கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க நிருவாகத்தினர், கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பண்ணையாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழை;வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
கால்நடை வளர்ப்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட மேச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன, அது மாத்திரமின்றி மேச்சல்தரைப் பகுதியல் அத்துமீறி பலர் பயிர்களையும் செய்து வருகின்றனர். இதனால் எமது எமது கால்நடை வளர்ப்பாளர்களின் கால்நடைகளை மேய்ப்பதற்குரிய போதியளவு நிலப்பரப்பு பற்றாக்குறை நிலவி வருகின்றது.
கால்நடைகள், திவுலானை பகுதியில் அமைந்துள்ள கொழுமபுவு- கண்டி பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும்போதும் அவ்வீதியால் அதி வேகத்துடன் செல்லும் கனரக வாகனங்களும், கால்நடைகளின் மீது ஈவிரக்கமின்றி மோதிவிட்டுச் செல்கின்றன, இவ்வாறு வாகனங்களில் அடிபட்டு இதுவரையில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கறவைப் பசுக்கள் இறந்துள்ளன.
மேச்சல்தரையும் குறைவடைந்து கொண்டுவருகின்றன. அரசாங்கம் பாலுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற அம்சத்தை முன்வைத்துள்ள போதிலும் கால்நடைகளை மேய்த்து பராமரிப்பதற்குரிய உரிய இடவசத்திகூட சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் இதுரையில் பெற்றுத்தர முடியாமலிருப்பது வேதனையளிக்கின்றது.
எனவே போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பதற்குரிய அடிப்படை வசதிகளை இனிமேலாவது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பெற்றுத்தர வேண்டும், இல்லையேல் எமது கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடாத்தவும், எமது பண்ணையாளர்கள் பின்னிக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment