26 May 2015

எமது கட்சியை குழப்புவதற்கு எங்களுக்குள் சிலர் ஊடுருவி பல வேலைகளைச் செய்கின்றார்கள் - அரியநேத்திரன்

SHARE

நாடாளுமன்ற தேர்தல் ஒன்று வரஇருக்கின்ற இந்நிலையில் மக்களின் செல்வாக்கு நிறைந்த பலம்வாய்ந்த எமது கட்சியை குழப்புவதற்கு எங்களுக்குள் சிலர் ஊடுருவி பல வேலைகளைச் செய்கின்றார்கள். இவற்றில் எமது மக்கள் மிகவும் விழிப்புடன் இருந்து செயற்பட வேண்டும்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்கள்பப மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அதியநெத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணைக் கிராமத்தில் 'சோள இளவரசி சீர்பாத தேவி' சிற்றரசியின் சிலை துறைநீலாவணைக் கிராம இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் திங்கட் கிழமை மாலை (25) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விலல் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.....

எமது இனத்தின் விடுதலைக்காக கடந்த காலங்களில் பல்வேறுபட்ட பெண்கள் எமது நிலத்தில் சிற்றரசிகளாக வாழ்ந்துள்ள வரலாறுகள் இருக்கின்ற பெருமை எமது தமிழ் இனத்திற்கு இருக்கின்றது. இதனால் அப்போதைய காலகட்டத்திலிருந்தே பெண் அடிமைத்தனம் இல்லாமல் இருந்துள்ளமை எடுத்துக் காட்டத் தக்கதாகும். 

சீர்பாத தேவி என்ற சிற்றரசி, உலகாநாச்சியார் என்ற சிற்றரசி, வன்னிநாச்சி என்ற சிற்றரசி, போன்ற சிற்றரசிகள், மட்டக்களப்பை ஆட்சி செய்திருக்கின்றார்கள். இது எமக்குக் கிடைத்த பெருமையும் வரலாறும் ஆகும். எனவே அப்போதைய காலகட்டத்திலிருந்தே பெண்ணடிமைத்தனம் நீக்கபபட்ட இனமாக தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

எனவே தமிழர்களின் வரலாற்றை தொடர்ச்சியாக பேணிப் பாதுகாக்க வேண்டும், இதனை தொடர்ந்து பேணவேண்டும்.  தமிழர்களின் பாரம்பரிய பின்னணியில் பல சிற்றரசிகளின் ஆட்சிகள், காணப்பட்டுள்ளன. 

1956 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த துறைநீலாவணைக் கிராமத்தில்தான் ஆயுதப்பரட்சி ஆரம்பிக்கப்பட்டது. அந்த அளவிற்கு இந்த துறைநீலாவணைக் கிராமம் பெயர் பெற்று விளங்குகின்றது.  துறைநீலாவணை என்கின்ற கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக இல்லாமலிருந்தால் தற்போது எமது எல்லைப் புறங்களில் சிங்களக் குடியேற்றம் ஏற்பட்டிருக்கும். 

கடந்த காலங்களில் ஆயுதப் போராட்டங்களிலும், அகிம்சை ரீதியிலும் எமது தமிழ் பெய்கள் நேரடியாகப்பங்கு பற்றிய வரலாறுகளும், எமக்கு உள்ளது. இந்நிலை இருந்தாலும் கூட ஆயுதப் போராட்டங்கள் வெளிக்கொணரப்பட்ட பின்புதான் பெண்களின் சக்தி மாபெரும் சத்தியாக உருவெடுத்தது. இருந்தலும் கூட பல்வேறுபட்ட துன்ப துயரங்களை அனுபவத்திதவர்கள் எமது பெண்கள். 
துற்போதைய நிலையில் போராட்டங்கள் நிறைவுற்று ஆட்சி மர்றம் நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையிலும்கூட எங்களுக்கு நாங்களே பெண்களை இழிவு படுத்தும் நிலை இருந்து கொண்டிருக்கின்றது. இதன் ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் புங்குடுதீவில் இடம்பெற்ற வித்தியாவின் படுகொலையாகும். 

வித்தியாவின் படுகொலையின் பின்னால் பல விடையங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இப்படுகொலைக்கும் சம்மந்தம் உள்ளது எனவும் கதை கட்டி விடுகின்றனர். எமது கட்சியில் இருக்கின்ற வி.ரி.தமிழ்மாறன் என்பவர் வித்தியாவைக் கொலைசெய்த கொலையாளிகளைக் காப்பாற்ற முயன்றார்ன என்ற கதைகள் எல்லாம் கட்டவிழ்க்கப் பட்டுள்ளன. எனவே வித்தியாவின் படுகொலைக்கும் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போடும் நிலையை பலர் அவர்களது வங்குறோத்து அரசியலுக்காகச் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்தை ஒதுக்குவதற்கு பலர் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். வித்தியாவைப் படுகொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இச்சம்பவத்திற்கு எதிராக வாதாடுவதற்கு எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய வழக்கறிஞர்கள் தற்போது முன்வந்து கொண்டிருக்கின்றார்கள். 

நாடாளுமன்ற தேர்தல் ஒன்று வரஇருக்கின்ற இந்நிலையில் மக்களின் பலம் நிறைந்த பலம்வாய்ந்த எமது கட்சியை குழப்புவதற்கு எங்களுக்குள் ஊடுருவி பல வேலைகளைச் செய்கின்றார்கள். இவற்றில் எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும்.

எனவே எமது இனம் கடந்த 65 வருட காலமாக விட்ட தியாகங்கள், போராட்டங்களின் பலனாக கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தது போன்று, எதிர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தற்போதிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை எமது மக்களட அதிகரிக்கச் செய்து பேரம்பேசுகின்ற சக்தியாக மாறி வடகிழக்கு இணைந்த தாயகத்தில் நிரந்த அரசியல் தீர்வினைப் பெறவேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்

SHARE

Author: verified_user

0 Comments: