கிழக்கு மாகாண சபையில் நாங்கள் தமிழ், முஸ்லிம, சிங்களம், என்ற பேதமின்றி, விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு வருகின்றோம் - கிழக்கு முதலமைச்சர்கிழக்கு மாகாண சபையில் நாங்கள் தமிழ், முஸ்லிம், சிங்களம், என்ற பேதமின்றி, விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு வருகின்றோம், எதிர் காலத்திலும் எல்லாவித்திலும் விட்டுக் கொடுத்துச் செயற்படத் தயாராகவுள்ளோம். கிழக்கு மாகாண சபையிலுள்ள நாங்கள் கட்சி போதமின்றி, விட்டக்கொடுப்புடன் கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்தி பற்றிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இச்செயற்பாடுகள் கிழக்கிலுள்ள அதிகாரிகள் மட்டத்திலும் பேணப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
என கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குரிய புதிய கட்டடத் திறப்பு விழா இன்று திங்கட் கிழமை (11) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகiளிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
கடந்த காலங்களில் பல கசப்பான விடையங்களைக் கடந்து தற்போது மீண்டு வந்துள்ளோம். ஒருபுதிய வாழ்மை மக்களுக்கு அமைத்துக் கொடுக்கும் தலைவர்களாக நாங்கள் இருக்க விரும்புகின்றோம். கடந்த 35 வருடகால இன்னல்களை மறந்துவிட்டு வெறுமனே செயற்பட்டுவிட முடியாது. கடந்த 35 வருடகால அனுபவங்களை தற்போது மீட்டுப் பார்ப்பபவர்களாக நாங்கள் இருக்கபின்றோம். வெறுமேனே அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு பிரிக்கப்பட்ட கசப்பான உண்மைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அவற்றை ஏற்று இனிமேலும் அவ்வாறான சதித் திட்டங்களுக்குள் மீண்டும் உள்வங்கப்படாமல் எதிர் காலத்தில் முன்னோக்கிச் செல்கின்ற சமூகத்தை உருவாக்கின்ற அரசில் தலைவர்களும், அதிகாரிகளும், மாறவேண்டும்.
கிழக்கு மாகாண சபையில் நாங்கள் தமிழ், முஸ்லிம், சிங்களம், என்ற பேதமின்றி, விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு வருகின்றோம், எதிர் காலத்திலும் எல்லாவித்திலும் விட்டுக் கொடுத்துச் செயற்படத் தயாராகவுள்ளோம். கிழக்கு மாகாண சபையிலுள்ள நாங்கள் கட்சி போதமின்றி, விட்டக்கொடுப்புடன் கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்தி பற்றிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இச்செயற்பாடுகள் கிழக்கிலுள்ள அதிகாரிகள் மட்டத்திலும் பேணப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
கிழக்கிலுள்ள அனைத்து அரச அதிகாரிகளும், இனங்களை மையமாக வைத்து சேவை செய்யக்கூடாது, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மக்களின் அபிவிருத்தி பற்றி மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிந்தித்துச் செயற்பட வேண்டும்,
கட்டடங்களால் மாத்திரம் எங்களை மாற்றிக் கொள்ள முடியாது, அனைவரினதும் மனோநிலையில் மாற்றம் வேண்டும். நாங்கள் அனைவரும் சகோதரங்களாகப் பிறந்தவர்கள். இந்த சகோர பிணைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரிக்கப் படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பாரிய சவால் அரசியல்வாதிகளோ, மக்களோ இல்லை அதிகாரிகளின் உள்ளங்களில் மாற்றமின்மையே பரிய சவாலாக இருக்கின்றது. கிழக்கிலுள்ள அரச அதிகாரிகளில் பலர் கடந்த 35 வருட கால கசப்பாக காலத்தை எவ்வாறு கடத்திக் கொண்டு வந்தார்களோ அவ்வாறுதான் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment