நகர அபிவிருத்தி புறநெகு திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு மாடிகளைக் கொண்டு இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
போரதீவுப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டடத் திறப்பு விழா
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குரிய புதிய கட்டடத் திறப்பு விழா இன்று திங்கட் கிழமை (11) நடைபெற்றது. மடக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பிரதித் தவிசாளர், பி.இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஷ்ணபிள்ளை, கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், உட்பட அரச உயர் அதிகாரிகள், போரதீவுப்பற்று பிரதச சன சமூக அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment