இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் ஈராண்டுக்கான ( 2013, 2014) பொதுக் கூட்டம் இன்று சனிக்கிழமை (23) மேற்படி சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 செஞ்சிலுவைப் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 70 இற்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது 2013 ஆம், 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினூடாக மாட்ட மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானச் செயற்பாடுகள். முதலுதவிச் செயற்பாடுகள், நிவாரண உதவிகள் தொடர்பாக இதன்போது தொண்டர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதுடன், எதிர் காலத்தில் சங்கத்தினூடாக மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்மை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment