23 May 2015

நாம் திராவிடர் எனும் அமைப்பினால் ஓலைக் குடிசையில் வசித்துவருவோருக்கு நிரந்தர வீட்டுத் திட்டம்.

SHARE

நாம் திராவிடர் எனும் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும், மிகவும் வறிய நிலையில் ஓலைக் குடிசையில் வசித்துவருவோருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் இன்று சனிக்கிழமை (23) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொடுவாமடு கிராமத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஓலைக் குடிசையில் வசித்துவரும் 2 குடும்பங்களுக்குரிய புதிய கல் வீடுகளுக்கான அடிக்கல் நடப்பட்டது.

ஒரு வீடு 300000 பெறுமதியில் கட்டிக் கொடுக்கப்படவுள்ளது.

நாம் திராவிடர் அமைப்பின் பங்குடாவெளி கோட்ட மகளிர் அணி செயலாளர் எஸ்.சுதாஜினியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாம் திராவிடர் அமைப்பின் தலைவர் க.மோகன், செயலாளர் வி.கமலதாஸ் பொருளாளர் ரஞ்சன் உப செயலாளர் கமல் மற்றும் கிராம சேவையாளர் கோகுலன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தமது அமைப்பின் மூலம் எதிர் காலத்தில் மட்டக்களப்பு மபாவட்டத்தில் ஓலைக் குடிசையில் வசித்துவரும் குடும்பங்களைத் தெரிவு செய்து இவ்வாறு நிரந்தர கல் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாக நாம் திராவிடர் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: