24 May 2015

பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இடை நிறுத்துமாறு கோரிக்கை.

SHARE

மட்டக்களப்பு மாவட்டம், போரதீப்பற்று பிரதேச செயலாளரை இடமாற்ற வேண்டுமென ஒருசில் அரசியல்வாதிகளும், ஒருசில அதிகாரிகளும், ஒற்றைக் காலில் நிற்பதாகத் தெரிவித்து, அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரி போரதீவுப் பற்று பிரதேசத்திலுள்ள கண்ணபுரம் கிழக்கு, மற்றும், சின்னவத்தை ஆகிய கிராமங்களின் அபிவிருத்திச் சங்கத்தினர் சமூர்த்தி, வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலியிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

இச்சங்கத்தினர் இன்று ஞாயிற்றுக் கிழமை (24) மேற்படி பிரதியமைச்சரிடம் வழங்கிய கடித்தில் மேலும் குறிப்பிடப் பட்டுளதாவது….

இவ்நல்லாட்சிக்கான ஆட்சியில் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத்தலைவராக தாங்கள் இரக்கும் வேளையில் இவ்வறான அரசியல் பழிவாங்கல் இடம்பெறுவதை நீங்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்டத்தில் எது நிகழ்வதாயினும் உங்களது அனுமதியிலே நடைபெற வேண்டும். 

சுயநலத்திற்காக பொது நலத்தை மறந்து செயற்படும் அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், தக்க பாடம் கற்பிக்க வேண்டும், இதை நிற்சயமாக வருகின்ற பொதுத் தேர்தல் புறம் தள்ளும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. 

எனவே இந்த இடமாற்றத்தை இடைநிறுத்துவது என்பது உங்களைத்தவிர வேறு எவராலும் முடியாது. என்பதை மனப்பூர்வதாக நாங்கள் நம்பி உங்களின் உதவியை எதிர் பார்க்கின்றோம். என அக்கடிதங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.




SHARE

Author: verified_user

0 Comments: