மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியிலிருந்து காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் மீட்டுள்ளதான மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நாகராஜா சுரேஸ்குமார் தெரிவித்தார்.
காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக தமக்குக் கிடைத்த தகவலையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்து இறந்த நிலையில் கிடந்த காட்டு யானையின் உடலை தாம் மீட்டுள்ளதாகவும், இன்று புதன் கிழமை யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்ரே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் இது தொடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நாகராஜா சுரேஸ்குமார் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment