வெங்காயத் தாமரை என்றழைக்கப்படுகின்ற நீர் வாழ் தாவரம் மட்டக்களப்பு மாவட்டம் பெரியபோரதீவில் அமைந்துள்ள பெரிய குளத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. தற்போது இத்தாவரம் பூத்துக்குலுங்கி அக்குளத்திற்கே அழகு சேர்க்கின்றது.
இதனை வீதியால் செல்லும் பலரும் பார்த்து இரசித்துச் செய்வதனையும் அவதானிக்க முடிகின்றது.
வெங்காயத்தாமரை நீர்வாழ் உயிரினங்களுக்கு நிழல் கொடுப்பதோடு மீன்களுக்கு உணவாககவும் அமைகின்றது. இவற்றினைவிட வெங்காயத்தாமரையை சேதனப்பசளை செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment