மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட
பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதிகளை புணரமைக்கும் நடவடிக்கைகள் இன்று
திங்கட் கிழமை (06) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மண்முனை தென் எருவில்
பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி வை.வசந்தகுமார் கூறினார்.
மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேலின் ஆலோசனையின் பேரிலும், வழிகாட்டலின் பேரிலும் இவ்வீதிப் புணரமைப்புக்கள் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபைக்குட்பட்ட
பழுதடைந்த நிலையில் காணப்படும் 37 வீதிகள் சபை நிதியில் ஒரு மில்லியன்
ரூபாய் செலவிலும், அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு
உள்ளுராட்சி உதவி ஆணையார் அலுவலகத்தின் அனுசரணையில் 17 வீதிளும்,
புணரமைப்பு செய்யப்படவுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்
செயலாளர் திருமதி வை.வசந்தகுமார் மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment