கிராமப் புறக்களில் உள்ள சிறிய காடுகளில் தங்கயிருந்த 11 காட்டு யானைகளை
சனிக்கிழமை (04) விரட்டித் துரத்தப் பட்டுள்ளதாக வன ஜுவராசிகள்
திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நாகராசா
கூரேஸ்குமார் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடர்ந்து காட்டு யானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும், இடம்பெற்று வருகின்றன. இதனை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவுக்கமைய சனிக்கிழமை (04) போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள விவேகானந்தபுரம், 35 ஆம் கிராமம், சின்னவத்தை, போன்ற இடங்களில் தங்கிருந்த காட்டு யானைகள் 11 ஐ விரட்டியடித்துக் கொண்டு கண்ணியம்பைக் காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளன.

வன ஜுவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நாகராசா கூரேஸ்குரார் தலைமையில் நடைபெற்ற இந்நடவடிக்கையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள், இலங்கை இராணுவத்தினர் அடங்கலாக நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
கண்ணியம்பைக் காட்டில் விடப்பட்டுள்ள இக்காட்டு யானைகள் மீண்டும் கிராமங்களுக்குள் வராமலிருக்க எல்லைப் புறங்களில் வன ஜுவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சனிக்கிழமை முதல் கடமையில் ஈடுப்டுத்தப் பட்டுள்ளதாகவும், மீண்டும் யானைகள் கிராமங்களுக்குள் நுளைய முற்படுமிடத்து அவற்றினை விரட்டியடிக்க தமது 2 ஆம் கட்ட நடவடிக்கைகள் தொடரும் எனவும் வன ஜுவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நாகராசா கூரேஸ்குரார் மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment