அரசாங்க நிர்வாக, மாகாணசபைகள், உள்ளுராட்சி அமைச்சினால் புதன் கிழமை (04) மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு மோட்டார் கிறடேர், சோட் வீல் ப்வாஸ் க்றேய் கெப், டிப்பர் போன்ற வாகனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் நிதியில் இருந்து 1கோடி 17இலட்சம் ரூபாய் செலவில் ஜேசிபி வாகனமும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த காலத்தில் குறித்த வாகனங்கள் இன்மை பிரச்சினை தற்போது நீங்கி உள்ளதுடன், இவ்வாகனங்களை கொண்டு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், மக்களுக்கு சிறஙந்த சேவையினையும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறித்த சபையின் செயலாளர் ந.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்
0 Comments:
Post a Comment