25 Mar 2015

முதலமைச்சர் பதவி என்பது அடையாளத்தை காட்டுகின்ற ஒரு பதவியாகும்.

SHARE
முதலமைச்சர் பதவி என்பது அடையாளத்தை காட்டுகின்ற ஒரு பதவியாகும். முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டிய சிந்திக்க வேண்டிய காலமும் இதுவேயாகும். எமது ஒற்றுமையில்தான் எமது எதிர்கால வெற்றி தங்கியுள்ளது’ என வெள்ளிக்கிழமை(20)  காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற விசேட உரையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்இன் விசேட அழைப்பின் பேரில் காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஜூம்ஆ தொழுகையின் பின் பல ஆயிரக்கான மக்கள் மத்தியில் விசேட உரையாற்றினார்.

அவர் தனதுரையில்இ மேலும் தெரிவிக்கையில்

‘காத்தான்குடி என்பது என் வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத ஊராகும். நான் ஒரு ஹாபிழ் ஆனதும் இந்த காத்தான்குடியில்தான்.
இங்கு குர்ஆனை கற்கும் போது எனக்காக துஆ செய்த தாய்மார்கள் காத்தான்குடியில் பல பேர் உள்ளனர். காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் கல்வி கற்கம் போது அதன் ஆரம்ப வளர்ச்சிக்காக நாங்கள் பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை சிறு வயதில் மேற் கொண்டோம். என தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: