6 Mar 2015

டெங்கின் தாக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் குறித்து மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் மட்டக்களப்பு மாநகரசபையும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்கள பணிமனையும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

இதனை முன்னிட்டு கல்லடி, உப்போடை, நாவற்குடா பகுதியில் பாரிய விழிப்புணர்வு மற்றும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
SHARE

Author: verified_user

0 Comments: