28 Mar 2015

மீன்வாடி தீவைத்து எரிப்பு – பெருளவு இயந்திரங்கள் நாசம்

SHARE
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்வர் கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த வர்ணமீன் பிடிக்கும் மீன்வாடி இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தினால் மீன் வாடியினுள் இருந்த பெறுமதியான பல இயந்திரங்கள் உட்பட பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலி மாத்தறை உட்பட பல வெளிமாவட்டங்களிலிருந்து வந்து வர்ணமீன்களை பிடித்து குறித்த வாடியில் வைத்து ஒக்ஸிஜன் ஏற்றுவதுடன் அதற்கு பயன்படுத்தப்படும் பெறுமதியான உபகரணங்களையும் இவ்வாடியில் வைத்திதுள்ளனர்.

வெளிமாவட்ட மீனவர்கள் வருவதை விரும்பாதவர்களே இதனை செய்திருக்கலாம் என மீன்வாடி உரிமையாளர் தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 25 வருடங்களாக குறித்த வாடி செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: