தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின்
பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இன்று காலை முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இலங்கையில் டெங்கு தாக்கம் அதிகமாகவுள்ள மாவட்டங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக டெங்கு தாக்கம் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நாவற்குடா, நொச்சிமுனை, கல்லடி, வேலூர் ஆகிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுகளிலும் இன்று வியாழக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் தெரிவித்தார்.
மாவட்டத்தின் பிரதான டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவில் ஆரம்பிக்கப்பட்டதுடன், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் தேசிய டெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்றையதினம் 19 பிரிவுளாக பிரிக்கப்பட்டு சுமார் ஆயிரம் இடங்கள் சோதனையிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி என்.ரஞ்சன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். பொதுச்சுகாதார பரிசோதகர்கள், விஷேட அதிரடிப்படையினா், பொலிஸார், தாதிய உத்தயோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 Comments:
Post a Comment