25 Mar 2015

மட்டில் காணாமல் போனோரின் உறவுகள் உண்ணாவிரதம்

SHARE
மட்டக்களப்பு நகரில் காணாமல் போனோரின் உறவினர்கள்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் முன்னால் கூடிய பெண்கள் காணாமல் போன உறவினர்களின் புகைப் படங்களுடன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்கான மகஜரை கையளித்தார்.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் காந்தி சேவா சஙக செயலாளர் எஸ்.கதிர் பாரதிதாசன் உட்பட பிரமுகர்கள் பலரும் சமுகமளித்திருந்தனர்
SHARE

Author: verified_user

0 Comments: