மட்டக்களப்புக்கு
இன்று (23) விஜயம் செய்த கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன்
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம்,
வாழைச்சேனை அந்நூர் மகா வித்தாயலயம், குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயம்
ஆகியவற்றில் தொழில்நுட்ப ஆய்வு கூடங்களினைத் திறந்து வைத்தார்.
இதன்
போது, பாண்டு வாத்தியம் வரவேற்புடன் அழைத்துவரப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட
அதிதிகள், தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினைத் திறந்து வைத்ததுடன்,
ஆய்வுகூடத்தினைப்பார்வையிட்டு மாணவர்களுடனும் கலந்துரையாடினர். அத்துடன்,
கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார். இந் நிகழ்வின்
போது பாசாலைக்கு ஒரு தொகுதி நூல்களை அமைச்சர் கையளித்தார்.
மட்டக்களப்பு
இந்துக் கல்லூரியில் அதிபர் க.அருட்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில், கிழக்கு மாகாண அமைச்சர்களான சி.தண்டாயுதபாணி,
கே.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, சீனித்தம்பி
யோகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் வாதிகளும், கல்வித்திணைக்கள அதிகாரிகளும்,
அமைச்சின் அதிகாரிகளும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment