14 Mar 2015

வடக்கையும், கிழக்கையும் பிரித்து அரசியல் செய்யும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அறவே இல்லை.

SHARE
வடக்கு கிழக்கிலே இருகின்ற அனைச்சுப் பதவிகளும் ஏனைய விடையங்களும் எமக்கு கிடைத்திருக்கின்ற தற்காலிகமாகன விடையங்களே தவிர அவை நிரந்தராமான தீர்வல்ல, வடக்கையும், கிழக்கையும் பிரித்து அரசியல் செய்யும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டபை;புக்கு அறவே இல்லை.  வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழன் தமிழனாக தன்மானத்துடன் சுய நர்ணய ஆட்சி வாழ்வதே எமது நோக்கமாகும்.
 
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்ளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். சர்சதேச மகளிர் தின நிகழ்வொன்று புதன் கிழமை (11) மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு அவர் உரையாறுகiயிலே இவ்வாறு தெரிவத்தார்.
 
இந்நிகழ்வில் அவர் மேலம் கருத்து தெரிவிக்கையில்…..

பெண்களுக்கான சம உரிமையை பெண்களுக்கான அந்தஸ்த்தைக் கொடுத்த மதம் என்றால் அது இந்து மதம்தான். ஏனைய மதங்களும் பெண்களுக்கு சம அந்தஷ்து கொடுத்தாலும்கூட இந்து மத்தில் கல்விக்காக ஒரு பெண் தெய்வத்தையும், வீரத்திக்காக இன்னுமொரு பெண் தெய்வத்தையும், செல்வத்திற்காகவும் மற்றுமொரு பெண் தெய்வத்தையுமே வழிபடுகின்றோம். எனவே இவைகளுக்கு ஆண் தெய்வங்களை வணங்கவில்லை எனவே இங்கிருந்து சமத்துவம் ஆரம்பிக்கப் படுகின்றது. ஆணாத்திககத்திலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காகவே மகளிர் தினம் வந்திருக்கின்றது.

இந்த உலகத்திலே 3 விதமான ஒளவையார்கள் வாழ்ந்திருப்பதாக செல்லப்படுகிறது. 10 ஆம் நூற்றாண்டில் ஒரு ஒளவையார், 16 ஆம் நூற்றாண்டில் ஒரு ஒளருவயாரும், சங்க காலத்தில் இன்றுமொரு ஒளவையார் வாழ்ந்திருக்கின்றர் எனவே பழங்காலத்தில்கூட தமிழையும், மண்ணையும், நேசித்தவர்கள்கூட பெண்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள்.

பெண்கள் தற்போது விஞ்ஞானிகளாகவும், சட்டத்தரணிகளாகவும், வைத்தியர்களாகவும் , பொறியியலாளர்களாகவும், நிருவாக அதிகாரிகளாகவும், பெண்களில் பலர் திகழ்கின்றனர்.

இவற்றினை விட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில்கூட  முதலாவது பெண் போராளியாகத் திகழ்ந்தவர் மன்னாரைச் சேர்ந்த மாலதி என்ற பெண். அவர் ஒரு வீர காவியம் படைத்ததினால் மாலதி படையணி என்ற ஒரு அமைப்பும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தது. இதுபோல் மட்டக்களப்பு படையாண்டவெளி எனும் இடத்தைச் சேர்ந்த அன்பரசி எனும் பெண் தமிழ் மண்ணுக்காய தனது இன்னுயிரைத் தியாகம் செய்தார் அதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அன்பரசி எனும் படைப்பிரிவும் இருந்தது. இவைகளனைத்தும் வரலாறாகும்.  எனவே ஆண்களுக்குச் சமனாக பெண்கள் சகல துறைகளிலும் சாதனைகள் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இவ்வாறான சாதனைகள் ஆண், பெண், சமத்துவத்தை நோக்கிச் சென்று, கொண்டிருக்கின்றது.

இந்த வெல்லாவெளி கிராமத்திலிருந்து இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள்  இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான றீகனின் தாய் உட்பட குடும்பத்தினர் அனைவரும் சுடப்பட்டார்கள்.

சர்வதேச ரீதியில் ஆண்களுக்கென்று ஒரு தினம் இல்லை ஏனெனில் பெண்கள் ஆணாத்திக்கதிலிருந்து விடுபட வேண்டும் அதற்காக வேண்டி பெண்கள்  போராட வேண்டும் பெண்களுக்கான உரிமை முதலில் ஆண்களிடமிருந்து வரவேண்டும் என்பதற்காகத்தான் சர்வதேச பெண்கள் தினம் பிரகடனப்படுத்தக் பட்டுள்ளது.

பெண்களை மதிக்கபின்ற , சம அந்தஸ்த்து வழங்குகின்ற நிலமை ஆண்களுக்கு வரவேண்டும். அவ்வாறு வராவிட்டால் மகளிர்தினம் அனுஸ்ட்டிக்கப் படுவதில் எதுவித அர்தமும் இல்லை.
 
கடந்ட65 வருட காலத்தில் இடம்பெற்ற மென்சக்கதி அரசியல் எனப்படும், அகிம்சை ரீதியான போராட்டத்திலும், வன்சக்தி அரசியல் எனப்படும் ஆயுத ரீதியாக போராட்டத்திலும். பெண்களின் பங்கு அளப்பெரியதாகக் காணப்பட்டது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெண்களின் உரிமைகட்கு மத்திப்பளித்து, பெண்களுக்கும் உரிய வகிபாகம் கொடுத்து வருகின்றது.


2009 மே 19 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற யுத்தம் மௌனித்தத்திற்குப் பிற்பாடு வெளியான செய்திகளிலட் எமது தமிழ் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது அதிகமானதாகும். இசைப்பிரியா என்ற பெண்ணை மிகவும் கேவலமாக அசிங்கப்படுத்திய வரலாறு இலங்கையிலே இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நடந்தேறியுள்ளது.

விபூசிகா என்ற குழந்தையையும், அவரது தாயாரையும் சிறையிலே அடைத்த வரலாறு இந்த மண்ணில் பதிவாகியுள்ளது. எனவே இவ்வாறான நிலையிலேதான் எமது தமிழ் பெண்களின் வாழ்க்கை இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் தலைமை என்கின்ற ஆள் மட்டும் மாற்றப் பட்டிருக்கின்றது ஆனால் எமக்கு எந்த வித உரிமையும் கிடைக்கவில்லை. அம்பாந்தோட்டை என்கின்ற முள்ளை, பொலனறுவை என்கின்ற முள்ளால் எடுத்துள்ளோம். ஆனால் முள் முள்ளாகத்தான் இருக்கின்றது.

கடந்த 2009 ஆம் அண்டிற்குப் பின்னர் நடைபெற்ற 8 தேர்தல்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. அந்த தேர்தல்களில் எமது மக்கள் எம்மோடு நின்று எம்மை ஆதரித்திரா விட்டால் இன்று எமது பல தமிழ் பிரதேசங்களில் புத்தம் சரணம் கச்சாமி எனும் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.  இதனால் தற்போது எமது பிரச்சனை சர்வதேசத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தார், றோடுகளுக்கும், கொங்றீட் றோடுகளுக்காகவும் நாம் அரசியல் செய்யவில்லை எமது மக்களின் சுய நிர்ணய வாழ்வுக்காகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்த கொண்டிருக்கினறது. அபிவிருத்திக்கள் நிலைத்திருக்க வேண்டும், அதற்கு எமக்குரிய அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படல் வேண்டும். எனவே எதிர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்தால் தற்போது ஐ.நா. சபையின் வாசற் கதவைத் தட்டும் நாம் அந்த கதவைத்திறந்து உள்ளே போகும் சந்தர்ப்பம் வந்துவிடும்.

வடக்கு கிழக்கிலே இருகின்ற அனைச்சுப் பதவிகளும் ஏனைய விடையங்களும் எமக்கு கிடைத்திருக்கின்ற தற்காலிகமாகன விடையங்களே தவிர அவை நிரந்தராமான தீர்வல்ல, வடக்கையும், கிழக்கையும் பிரித்து அரசியல் செய்யும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டபை;புக்கு அறவே இல்லை.  வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழன் தமிழனாக தன்மானத்துடன் சுய நர்ணய ஆட்சி வாழ்வதே எமது நோக்கமாகும்.  என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: