3 Mar 2015

கிழக்கு மாகாணத்தில் அமைச்சுப்பதவிகளை ஏற்றாலும் எமது மக்களுக்கான உரிமை போராட்டம் தொடரும்-சி.தண்டாயுதபாணி

SHARE
(பர்விஸ் ரோஸன்)

கிழக்கு மாகாண ஆட்சி பொறுப்பில் நாம்  இணைந்து கொண்டாலும் எமது உரிமை போராட்டமும் ஜனநாயக ரீதியாக எமது உரிமைகளை எட்டும் வரை தொடரும் என்பதை எமது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். என கிழக்கு மாகாண கல்வி கலாச்சார விவகாரங்கள் தகவல் தொழினுட்பக் கல்வி இளைஞர் விவகாரம் பாலர் பாடசாலை கல்வி விளையாட்டு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர்  சி.தண்டாயுதபாணி அவர்கள் தெரிவித்தார்.

இன்று காலை அமைச்சர் பதவிப்பிரமானத்தை செய்ததன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த  அமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் பிரதானமாக வாழுகின்ற  தழிழ் முஸ்லீம் சமூகங்கங்கள் இரண்டும் ஒற்றமையாக இணைந்து செயற்படுவதன் மூலமே இந்த இரண்டு சமூகங்களும் வெற்றி பெற முடியும் .ஒருவருக்கு ஒருவரு; விட்டுக் கொடுத்து இணைந்து வாழ்வது என்பது இந்த இரண்டு சமூகங்களின் முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியமானுதாகும் அதனை கருத்தில் கொண்டே கிழக்கு மாகாணசபை ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து அமைச்சுப்பதவியை இன்று நாம் பொறுப்nபேற்றுள்ளோம்..
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களாகிய நானும் கி;துரைராஜசிங்கம் அவர்களும் கல்வி விவசாய அமைச்சிக்களை பொறுப்பெடுத்து கொண்டுள்ளோம்.

விட்டுக் கொடுக்காத வகையில் இனங்கிக் கொண்டு வாழ்வது முரண்பாடுகளோடு வாழ்வது என்பது.இந்த இரண்டு சமூகங்களுக்குமே தோல்வியைத் தரும்.இந்த வகையிலே தான் இந்த இரண்டு சமூகங்களின் ஒற்றுமையை கருதி அதேவேளை இந்த இரண்டு சமூகங்களிற்கு இடையிலேயே காணப்படும் சிறிய இடைவேளிகளை நிரப்பிக் கொண்டு அதனூடாக இந்த மக்கள் எழுற்சி பெற்று எமது தலைவர்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றார்கள் என்ற உட்வேகத்திலேயே மக்கள் ஒற்றுமைக்ட்டு வாழ வேண்டும் என்பது தான் எங்களுடைய இந்த இணைப்புக்கு முக்கியமான காரணமாகும் எனவும் தெரிவித்தார்

அதோடு இன்னுமோரு முக்கியமான காரணமொன்றுள்ளது இந்த நாட்டிலே இந்த மாகாணத்திலே வாழுகின்ற தமிழ் மக்கள் குறிப்பாக நீண்டகால போர் ஆனர்த்தங்கள் துன்பப்பட்டு அவலப்பட்டு வாழ்ந்தது கொண்டிருக்கின்ற மக்களுடைய வாழ்க்கையை அவர்களுடைய அடிப்படைத்தேவைகளை  ஒரு சிறிய அளவிலாவது பூர்த்தி செய்வதற்கு  அவர்களுடைய அழிவு நிலமைகளை தீருத்துவதற்கு ஒரு அதிகாரரீதியான  பங்களிப்பை கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கு மென்ற எண்ணமும் இந்த அரசில் கூட்டுச்சேர்வதற்கான காரணமாகும்

 சிங்கள மக்களை இதில் நாம் மறந்து விட முடியாது
.இந்;த மாகாணத்தில் இணைந்து வாழுகின்ற ஒரு முக்கியமான இனம். அவுர்களின் தேவைகளையும் அனுசரித்து அவர்களது தேவையையும் நிறைவேற்றி  எல்லோரும் இந்த மாகாணத்திலே முன்னேற வேண்டும் என்பது தான்  எமது எதிர்பார்ப்பாகும்.என தெரிவித்தார்.
;

SHARE

Author: verified_user

0 Comments: