மட்டக்களப்பு
மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவின், கட்டு முறிவு
நீர்ப்பாசனத்திட்டங்கள், மதுரங்கேணி , கிரிமிச்சை சிறிய
நீர்ப்பாசனத்திட்டங்களுக்காக ஆரம்பக் கூட்டம் வாகரை பிரதேச செயலகத்தில் (03) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில்
நடைபெற்றது.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண
சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகியின் வரவேற்புரையை அடுத்து ஆரம்பமான இக்கூட்டத்தில், மத்திய மாகாண, சிறு நீர்ப்பாசன, கமநல கேந்திர நிலைய, அதிகாரிகளும், பெருந்தொகையான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இவ்வருடத்தின் சிறு போக பயிர்ச்செய்கைக்கான வேலைகளை தொடங்குவதற்கான முடிவுகளை எடுக்கும் வகையிலான ஆரம்பக் கூட்டங்களின் இறுதிக் கூட்டமாக அமைந்த இந்தக் கூட்டத்தில் சிறுபோகத்துக்கான ஆரம்ப உழவு, முதல் நீர் விநியோகம், விதைப்பு, அறுவடை, கால்நடைகள் அகற்றல், மீளக் கொண்டுவருதல், உழவுக் கூலி, வாய்க்கால் துப்பரவுக் கூலி உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
கடந்த மாதம் 26 ஆம் திகதி போரதீவு பற்று - நவகிரி, தும்பங்கேணி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்கான திட்டங்கள் ஆகியவற்றுக்கான கூட்டங்கள் நடைபெற்றன. மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் உன்னிச்சை, சிறு நீர்ப்பாசனத் திட்டங்கள், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் உறுகாமம், கித்துள் வௌ, வெலிக்காகண்டி, சிற நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் 27ஆம் திகதியும், 28 ஆம் திகதி கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவின், வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீரப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டமும் நடைபெற்றிருந்தன.
அந்த வகையில் சிறுபோக நெற்செய்கைக்கான இறுதிக் கூட்டமைக கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவின், கட்டு முறிவு சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள், மதுரங்கேணி, கிரிமிச்சை சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக ஆரம்பக் கூட்டம் வாகரை பிரதேச செயலகத்தில் நேற்றை தினம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments:
Post a Comment