5 Mar 2015

வாகரை பிரதேசத்தின் பூகோள வரைபடம் , பொதி வௌியிடும் நிகழ்வு

SHARE
கரையோர வலய விசேட முகாமைத்துவ திட்ட வாகரை பிரதேசத்தின் பூகோள வரைபடம் மற்றும் தரவுகள் பொதி வெளியிடும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ். ஆர். ராகுலநாயகி தலைமையில்  (03) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இத்திட்டம் மாகவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் இபார்ட் திட்டத்தின் நிதியீட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு சுமார் 2.5 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த இத்திட்டம் GIS தரவுகள் மற்றும் RS தொழிநுட்பத்தின் மூலம் இப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இதன் உத்தியோக பூர்வ ஆவணங்களான இறுவட்டு மற்றும் புத்தகங்களை உத்தியோக பூர்வமாக பிரதேச செயலாளரிடம் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வளங்கள் முகாமைத்துவ திணைக்கள மாவட்ட திட்ட இணைப்பாளர்  ஏ.கோகுலதீபன் கையளித்தார்.

இந்நிகழ்வில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வளங்கள் முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,கிராம உத்தியோகத்தர்கள்,திட்ட உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

இவ் ஆண்டு  84 மில்லியன் ரூபா விசேட முகாமைத்துவ திட்டத்திற்காகவும், வாவி எல்லைப்படுத்தும் பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட திட்ட இணைப்பாளர் ஏ. கோகுலதீபன் தெரிவித்தார்.

அத்தோடு  வாவி முகாமைத்துவம், தாவர நடுகை, அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள், தோணாக்களை புனரமைத்தல், கடற்கரையோர மரநடுகை,  மலசல கூடங்களை அமைத்தல் சேதன முறை விவசாய பயிர் செய்கை வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் போன்றன நடைமுறைப் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
unnamed m


njnjn
SHARE

Author: verified_user

0 Comments: