9 Feb 2015

தொண்டர் ஆசிரியர் நிரந்தர நியமனத்தை புதிய அரசிடம் கோரும் முயற்சி

SHARE
திருகோணமலையில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிவர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்த்தின் மூலம் பெற்றுத் தரக் கோரி தமது செயற்பாடுகளை முன் னெடுக்கவுள்ளது.

இதன் அடிப்படையில் இயங்கி வரும் திருகோணமலை மாவட்டத்தின் தொண்டர் ஆசிரியர் சங்கமானது தமது சங்கத்தின் அங்கத்தவர்களான 140 பேரின் விபரங்களை பூர்தி செய்வதுடன் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் செயற்பாடு ஒன்றை மேற் கொள்ளவுள்ளனர்.

எனவே எதிர் வரும் 11.02.2015 (புதன்கிழமை)அன்று காலை 8.00 மணிமுதல் திருகோணமலை உற்துறைமுக வீதியில் உள்ள இந்து கலாச்சார மண்டபத்தின் முன் இந்த தரவுகள் சேகரிக்கும் பணிகள் இடம் பெறவுள்ளது.
தவறாது கடந்த காலங்களில் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்து நிரந்தர நியமனம் கிடைக்காது பாதிக்கபட்ட அணைவரையும் வந்து தமது தரவுகளை  பதிவு செய்து கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இரா.ஜெயமோகன் தெரிவிக்கின்றார்.மேலதிக தகவல்களுக்கு  077-4324195 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்வு கொள்ளவும்.

SHARE

Author: verified_user

0 Comments: