திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு முன் உள்ள உணவகங்களின் பணியாளர்களால் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் அசௌகரிகங்கம் என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இப்பகுதியில் உள்ள இரண்டு பிரபலமான உணவகங்களில் உள்ள பணியாளர்கள் வீதியில் நின்று மீன் விற்பதை போன்று கூவிக் கூவி தமது கடைக்கு வாருங்கள் வாருங்கள் என்று மக்களை வற்புருத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் முதல் உள்ளுர் உல்லாசப பயணிகள் மற்றும் அப் பகுதியில் வீதியில் செல்லும் மக்களைக் கூட உள்ளே வாருங்கள் என அழைக்கிறார்கள் அவ்வழியே வேறு வேளைக்கு செல்வர்களும் இவர்களால் வற்புருத்தப்படுகிறார்கள்.
காத்தான்குடி ஏறாவூர் ஆகிய பகுதியை சேர்ந்த இந்த உணவகங்களிடையே கடந்த ஆண்டு; பணியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வியாபார போட்டி காரணமாக ஒருவருக்கு கொலை முயற்சியும் கத்தி குத்து சம்பவமும் இடம் பெற்றது.குறிப்பிடத்தக்கது
எனவே இவ்விடயம் தொடர்பாக நகரசபையோ பொது சுகாதார பரிசோதகர்களோ பொலிசாரோ சுகாதார திணைக்களமோ எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளாமல் இருப்பதை இட்டு பொது மக்களுக்கு மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.அதிகாரிகளின் கவனத்திற்கு அட்ப விடயங்களுக்காக விலை போகாது இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும்.
மேலும் திருகோணமலை நகரசபை அமர்வுகளில் தவிசாளரும் உறுப்பினர்களும் இந்த உணவகங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பக்க வேண்டும் என பல முறை வாய் பேச்சில் மட்டுமே சொல்லி வருகிறது என்பதையும் பொது மக்கள்(வாக்காளர்கள்) நன்கு அறிவார்கள்.
0 Comments:
Post a Comment