17 Feb 2015

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கல்லடி காரியாலயத்தில் பிரியாவிடை வைபவம்

SHARE
-எம்.எஸ்.எம்.சறூக் -

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்டம்  கல்லடி, பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில் மானி வாசிப்பு பரிசோதகராக கடமையாற்றிய கே.பி.விஜயபால தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின அம்பாரை அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு இடமாற்றம் பெற்றுச் செல்லும், கே.பி.விஜயபாலவுக்கான பிரியாவிடை வைபவம் வணிக உத்தியோகத்தர் ஜனாப் எம்.பி.எம்.றிபாய்தீன் தலைமையில் அலுவலக கேட்போர் கூடத்தில் வெள்ளிகிழமை (13) மாலை இடம் பெற்றது.

இதன் போது இடமாற்றம் பெற்றுச்செல்லும்  கே.பி.விஜயபாலவுக்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர்  கே.விநோதனினால்  கே.பி.விஜயபாலவுக்கு நினைவுப்பரிசு ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கல்லடி, பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: