இந்த நாட்டிலே என்ன நடைபெறுற்றது, தற்போது என்ன நடைபெறுகின்றது. என்பதை மக்கள் கண்டு கொண்டிருக்கின்றார்கள் வாழ்க்கையிலே “மாற்றம் ஒன்றுதான் மாறாமல் இருப்பது” , “மாற்றம் ஒன்றுதான் நிரந்தரமாக இருப்பது” இந்த நாட்டில் மாற்றம் வந்துள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளார்கள். இலங்கையிலே இருந்த அராஜக ஆட்சி, காட்டாட்சி, எமது இனத்தை அழித்து, ஒழித்த ஆட்சி மாறி ஒரு ஜனநாயக ஆட்சி அதாவது எமது பாதிக்கபட்ட எமது சமூகத்திற்கு ஒழியைத் தரும் என நினைக்கும் அளவிற்கு தற்போது புதிய ஆட்சி பிறந்திருக்கின்றது.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார் மட்.மண்டூர் 14 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிய வெள்ளிக் கிழமை (13) மாலை மேற்படி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.புஸ்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பல சொத்துக்களையும், உயிர்களையும், உடமைகளையும் இழந்துள்ளார்கள், ஆனால் இழந்துள்ள உயிர்களை மீண்டும் பெறாவிட்டாலும் கல்வியின் மூலம் ஏனைய அனைத்தினையும் பெற்றுவிடலாம். பிரதேச அபிவிருத்தி, சமூதாய முன்னேற்றம், அனைத்தினையும் கல்வியின் மூலம் பெற்றுவிடலாம். இவைகளனைத்தையும் கருத்தில் கொண்டு மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்கள் போன்றோருக்கு கீழ்ப்படிந்து நன்றாகக் கல்வி கற்க வேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அன்னியோனியமாகப் பழக வேண்டும், பாடசாலைகளில் பிள்ளைகள் இருக்கும் காலத்தைவிட பெற்றோர்களிடத்தில் பிள்ளைகள் இருக்கும் நேரம் அதிகமாகும். எனவே பெற்றோர்கள், வீட்டில் பொழுதுபோக்கு சாதனங்களைக் குறைப்பதன் மூலம் பிள்ளைகளின் கற்றலை மேலும் மேம்படுத்த முடியும்.
அதுபோல் மாணவர்களும், பெற்றோர், ஆசிரியர்கள், மற்றும் சமுதாயத்திற்கும் கட்டுப்பட்டு தீய பழக்க வழக்கங்களுக்குட்படாமல், எதிர் காலத்தில் சிறந்த கல்விமான்களாகத்திகழும்போது எமது பிரதேசம் தானாகவே அபிவிருத்தி கண்டுவிடும்.
இந்த நாட்டிலே என்ன நடைபெறுற்றது, தற்போது என்ன நடைபெறுகின்றது. என்பதை மக்கள் கண்டு கொண்டிருக்கின்றார்கள் வாழ்க்கையிலே “மாற்றம் ஒன்றுதான் மாறாமல் இருப்பது” , “மாற்றம் ஒன்றுதான் நிரந்தரமாக இருப்பது” இந்த நாட்டில் மாற்றம் வந்துள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளார்கள். இலங்கையிலே இருந்த அராஜக ஆட்சி, காட்டாட்சி, எமது இனத்தை அழித்து, ஒழித்த ஆட்சி மாறி, ஒரு ஜனநாயக ஆட்சி அதாவது எமது பாதிக்கபட்ட எமது சமூகத்திற்கு ஒழியைத் தரும் என நினைக்கும் அளவிற்கு தற்போது புதிய ஆட்சி மலர்ந்திருக்கின்றது.
கடந்த ஆட்சிக்காலத்தில் அதிபர், ஆசிரியர்கள், அரசியல் வாதிகள், உட்பட பலரும் அடக்கப் பட்டார்கள். தடுக்கப் பட்டார்கள். என்பது உண்மை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின ர் பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு அனுமதி கிடைக் கவில்லை தற்போது அந்த நிலமை மாறி இருக்கின்றது.
இலங்கை தேசிய அரசிலில் மாற்றம் வந்துள்போல் கிழக்கு மாகாண ஆட்சியிலும் மாற்றம் வந்துள்ளது. கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்ற வேண்டும் என எதிர் பாரத்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் எதிர்கட்சி வரிசையிலிருந்ததுபோதும் இனிவரும் காலத்தில் ஆட்சி அதிகாரதிதிலிருந்து பல வேலைத் திட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்திருக்கின்றார்கள்.
எனவே சோரம்போகாமல் அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர் காலத்தில் எமது மக்கள் மத்தியில் அபிவிவிருத்திகளையும் முன்னெடுக்கக் காதிருக்கின்றது. என அவர் மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment