மாகணத்திட்க்கு உட்பட்ட வேலைத்திட்டங்களை அபிவிருத்தி செய்து தருமாறு
அம்பாறை மாவட்ட மருதமுனை பிரதேச அபிவிருத்தி குழு கிழக்குமாகாண முதலமைச்சர்
ஹபீஸ் நசீர் அஹமட்டினை கொழும்பில் உள்ள அலுவலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை
(13) மாலை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது மருதமுனை
முன்னாள் உலமா சபை தலைவர் எ.அபுஉபைத மௌலவி அவசரமாக செய்து தர வேண்டிய
இடங்களை முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டினார். அந்தவகையில் மருதமுனை பிரதேச
வைத்தியசாலை,அரச ஆயுர்வேத வைத்தியசாலயை, தாருல் ஹுதா அரபிக் கல்லுரி,
அன்னஹ்லாஅரபிக் கல்லுரி, கமு/கமு/அல் ஹிக்மா கணிஸ்ட பாடசாலை,
கமு,/கமு/அக்பர் வித்தியாலயம், அல் மினா வித்தியாலயம் பாண்டிருப்பு,
கமு/கமு/மருதமுனை அல் மதீனா வித்தியாலயம்/ கமு/கமு/அல் ஹம்ரா வித்தியாலயம்,
கமு/கமு/புலவர்மணி சரிபுதீன் வித்தியாலயம் பெரிய நீலாவணை, போன்ற பாடசாலை,
வைத்தியசாலையில்நிலவுகின்ற கட்டிட பிரச்சினை தளபாட உபகரணங்கள், அலுவலக
உபகரணம், கணணி, நவீன வசதியுடன்மாணவர்கள் தங்குமிட விடுதி, நோயாளிகள் சிறந்த
முறையில் பராமரிக்க கூடிய வசதி, கொண்ட பாடசாலைகளாக இவைத்திய சாலைகளாக, சிறந்த மார்க்க கல்வி கற்க்க கூடிய தாக தரமுரத்தி தருமாறு
கேட்டுக்கொண்டார்கள்.
இதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சர்
இக்கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இப்பிரச்சினைக்கான
முழு தீர்வினை பெற்றுத்தருவதாகவும் கூறினார் இதன் போது மருதமுனை இளைஞர்
காங்கரஸ் இணைப்பாளர்எம். எச். எம்.தாஜுதீன், மாநகர சபை உறுப்பினர் உமர் அலி ,சட்டத்தரணி எ.ரக்கீப், சமூக சேவையாளர்கள் கொண்ட குழு முதலமைச்சருக்கு
மகஜர்ஒன்றினையும் கையளித் தாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் .ஏ . எம்.
மஹ்சூம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment