6 Feb 2015

படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணாவில்லை

SHARE
மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களின் படகு கவிழ்ந்ததன் காரணமாக ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் மூன்று பேர் படகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்ததன் காரணமாக மூன்று பேரில் இருவர் தப்பியுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் மட்டக்களப்பு கறுவப்பங்கேணியை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் விஜயகுமார் (40வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை தேடும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் இந்த தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: