மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களை அரச சேவைக்குள்
உள்வாங்கி, அரச நியமனங்களை வழங்குமாறு கோரி, மட்டக்களப்பு நகரிலுள்ள
காந்திப் பூங்காவுக்கு முன்பு அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது.
(18), மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 500க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, பேரணியாக மட்டக்களப்பு கச்சேரிவரை சென்றனர்.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இவர்கள் கையளித்துள்ளனர்.
அண்மையில் கிழக்கு மாகாணசபையாலும் கல்வித் திணைக்களத்தாலும் முன்பள்ளி ஆசிரியர்களை உள்வாங்கி அவர்களுக்கான நியமனங்களை வழங்குவதாக தெரிவித்த போதிலும், அது மேற்கொள்ளப்படாமையால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் 546 முன்பள்ளிகள் உள்ளன.
அதில் மட்டக்களப்பில் 107 முன்பள்ளி ஆசிரியர்களும் கல்குடாவில் 324 முன்பள்ளி ஆசிரியர்களும் பட்டிருப்பில் 259 முன்பள்ளி ஆசிரியர்களும் மட்டக்களப்பு மத்தியில் 300 முன்பள்ளி ஆசிரியர்களும் மட்டக்களப்பு மேற்கில் 418 முன்பள்ளி ஆசிரியர்களும் உள்ளனர்.
மேலும் 18,828 முன்பள்ளி மாணவர்கள் உள்ளதாக கிழக்கு மாகாண முன்பள்ளி சிறுவர் நேயப் பாடசாலைகளின் பணிப்பாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.
´ஆரம்பக் கல்விக்கு அடித்தளம் இடும் எங்களுக்கு அரசாங்கம் வழங்கும் ஆதரவு போதுமா?´, ´முன்பள்ளி ஆசிரியர்கள் என்றால் ஏளனமா?´, ´முன்பள்ளி ஆசிரியர்களை அரச சேவைக்குள் உள்வாங்குங்கள்´ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

0 Comments:
Post a Comment