19 Feb 2015

இனிய பாரதியைக் கைதுசெய்யுமாறு ஆர்ப்பாட்டம்

SHARE
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார எனப்படும் இனிய பாரதியைக் கைதுசெய்யுமாறு கோரி திருக்கோவில் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவர் யுத்த காலத்தில் மக்களை சித்திரவதை செய்ததோடு கொலைச் சம்பவங்களுடனும் தொடர்புபட்டவர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யுத்த காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: