17 Feb 2015

முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் உதவிக்கு உதயம் அமைப்புக்கு நன்றி தெரிவிப்பு

SHARE
மட்.முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவில் விஞ்ஞான, கணித பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, சுவிஸ் உதயம் அமைப்பு தங்குமிடத்துடன் மற்றும்; மாணவர்களைக் கற்பிப்பதற்கு தேவையான  பண உதவியினையும், பாடசாலை நிருவாகம், கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றை வழங்வதற்கு முன்வந்துள்ளனது.

அந்த சுவிஸ் உதயம் அமைப்புக்கும், இம்மாணவர்களின் கற்றலுக்கு உதவி வழங்கிய ஏனையோருக்கும்,  நன்றி தெரிவிக்கும் நிகழ்வு திங்கட் கிழமை (16) முதலைக்குடா மகா வித்தியாலய மண்டபத்தில் வித்தியாலய அதிபர் சி.அகிலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது பல்வேறு நிறுவனங்கள், கோயில்கள், பொதுமக்கள் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தனர். அவர்களுக்கும் தற்போது உதவி வழங்க முன்வந்துள்ள உதயம் அமைப்புக்கும், அதற்காக உதவி புரிகின்ற அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளை மாணவர்களும், பெற்றாரும், பெற்றார் அபிவிருத்திச் சங்கத்தினரும், அதிபரும், கோட்டக்கல்விப் பணிப்பாளரும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.பரமானந்தம், பிரதி அதிபர் சண்முகநாதன், பெற்றார் அபிவிருத்திச்சங்க செயலாளர் சிவலிங்கம், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு பல மாணவர்கள் கல்வியினையும் இழந்து நின்றவேளையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில்  வைத்தியர்களையும், பொறியிலாளர்களையும் சொந்த மண்ணிலே உருவாக்க வேண்டும், இம்மண்ணிலும் சாதனைகளை, இருக்கின்றனர் என்பதை வெளியுலகுக்கு காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்.முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் உயர்தரபிரிவில் விஞ்ஞான, கணித பாடங்கள் 2012ல் ஆரம்பிக்கப்பட்டது.

உயர்தர விஞ்ஞான, கணித பிரிவை ஆரம்பிப்பதற்காக மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு, உரிய மாணவர்களை தெரிவு செய்து பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும். இவர்களை தங்குமிடம் அமைத்து பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதற்கும் பாரிய நிதி வசத்திகள், தேவைப்பட்டன.

இந்நிலையில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் முயற்சியினாலும் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பிரதேச அதிபர்கள், மாவட்டத்தில் பலரும், மக்களின் வீடுவீடாக சென்று நிதி திரட்டியும், நிறுவனங்கள் அமைப்புக்கள், கோயில்கள் சார்ந்தும் சென்று நிதிகளைப் பெற்று இம்மாணவர்களுக்கான கல்வியினை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: