ஜனநாயகம் மலர்ந்திருக்கின்றது என கூறிக் கொண்டு எதிர் வருகின்ற தேர்தலிலே போட்டியிடுவதற்கு இப்போதிருந்தே முனைகின்றார்கள். கடந்த காலங்களில் பல கடத்தல்களுக்கு மத்தியிலும், துன்பறுத்தல்களுக்கு மத்தியிலும், இன்னல்களுக்கு மத்தியிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மாகாணத்தில் தக்க வைத்தவர்கள் நாங்கள். ஆனால் எமது கூட்டமைப்பிலும், வேறு பல கட்சிகளிலும், தேர்தலில் குதிக்க பலர் முனைகின்றார்கள் அவர்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் கடந்த காலங்களில் பல இன்னல்களுக்கு மத்தியிலும் கடத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பபைக் கட்டிக் காத்தவர்களை எமது மக்கள் மறந்து விடமுடியாது.
என தமிழ் தேசிக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்.காக்காச்சிவட்டை விஷ்னு வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி செவ்வாக் கிழமை (24) மாலை வித்தியாலய அதிபர் எஸ்.தம்பிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்……
மாணவர்கள் விளையாட்டிலும் அக்கறை செலுத்துவது போன்று கற்றலிலும் கூடிய அக்கறை செலுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பிலே இருந்த 4 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒரு கோடி ரூபாய் செலவில் இப்பாடசாலைக்கு இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றையும், ஆசிரியர் தங்குமிடம் ஒன்றையும், அமைத்துக் கொடுத்துள்ளோம். நாம் மேற்கொண்ட இச்செயற்றிட்டமானது இலங்கையிலே எவரும் செய்ய முடியாத விடையத்தை இக்கட்டடம் அமைத்ததன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து காட்டியிருக்கின்றது.
இப்பாடசாலையிலே கற்ற பலர் இந்த மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கியிருக்கின்றார்கள், இந்தப் பிரதேசமும் பல மாவீரர்களைச் சுமந்து நிற்கின்றது. என்றால் அதனை நாங்கள் மறக்க முடியாது.
மாவீரர்களின் தியாகத்தால்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தற்போது தடம்பதித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. விடுதலை என்கின்ற பயணத்திலே தற்போது எமது அரசியல் செயற்பாடானது சர்வதேச ரீதியில் சென்று கொண்டிக்கின்றது. அதனால் பல மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஐ.நா சபையிலே இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை என்கின்ற விடையம் தொடர்பில் 3 தடவைகள், கொண்டு வரப்படுள்ளன. எதிர் வருகின்ற மார்ச் மாதமும் ஐ.நா சபையில் கொண்டுவரவிருந்த இந்த பிரேரணையை 6 மாதங்களுக்குப் பிற்போடப் பட்டிருக்கின்றது. இந்த பிரேரணை பிற்போடப்பட்டதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பகிரங்கமாக தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றது.
இந்த பிரேரணை பிற்போடப்பட்டதைக் கண்டித்து யாழ் கல்விச் சமூகம் ஆர்ப்பாட்டத்தின் மூலம் கண்டிக்கின்றது, அவர்களது ஆர்ப்பாட்டக் கண்டனத்திற்கு கிழக்கில் இருக்கின்ற நாமும் உறுதுணையளிக்கின்றோம்.
தமிழர்களைக் கொன்றளித்த இந்த இனப் படுகொலை விடையத்தை ஐ.நாவிலே கொண்டு வருவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இடை நிறுத்துவதற்கு துணை நிற்கப்போவதில்லை. ஐ.நாவிலே அறிக்கை வரவேண்டும், பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும், காணாமல் போனவர்களைக் கண்டு பிடித்து கெடுக்க வேண்டிய பொறுப்பும் சர்வதேசத்திற்கு இருக்கின்றது.
இலங்கை அரசு மாறியிருக்கின்றது என்கின்ற காரணத்திற்காக ஐ.நா விசாரணையை இடை நிறுத்தவோ, மாற்றவோ முடியாது.
எனவே தமிழர்களின் பிரச்சனை சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை எமது மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற 7 தேர்தலிகளிலே எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஜனநாயக ரீதியில் பலப்படுத்தியிருக்கின்றார்கள். அந்த ஜனநாயகப் பலம் என்பது சர்வதேசத்திலே ஒரு அங்கமாக இருந்து கொண்டிருக்கின்றது.
இலங்கை வரலாற்றிலே தமிழ் மக்களுடைய வரலாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கின்றது. இதற்கு அடித்தளமிட்டவர்கள் எமது தமிழ் மக்கள்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே கிழக்கிலுள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பக்கு வாக்களித்திருந்தால் தற்போது கிழக்கில் ஆட்சி அதிகாரம் எமது பக்கம்தான் இருந்திருக்கும். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் கை நழுவ விட்டு விட்டோம்.
எனவே இந்த மண்ணிலே ஆகுதியாகியுள்ள பல மாவீரர்களின் கனவுகளுக்கு பலன் கிடைக்க வேண்டுமாக இருந்தால் எதிர் வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் அனைவரும் தமிழ் தேசியத்தின் பால் நிற்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.
ஜனநாயகம் மலர்ந்திருக்கின்றது என கூறிக் கொண்டு எதிர் வருகின்ற தேர்தலிலே போட்டியிடுவதற்கு இப்போதிருந்தே முனைகின்றார்கள். கடந்த காலங்களில் பல கடத்தல்களுக்கு மத்தியிலும், துன்பறுத்தல்களுக்கு மத்தியிலும், இன்னல்களுக்கு மத்தியிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மாகாணத்தில் தக்க வைத்தவர்கள் நாங்கள். ஆனால் எமது கூட்டமைப்பிலும், வேறு பல கட்சிகளிலும், தேர்தலில் குதிக்க பலர் முனைகின்றார்கள் அவர்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் கடந்த காலங்களில் பல இன்னல்களுக்கு மத்தியிலும் கடத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பபைக் கட்டிக் காத்தவர்களை எமது மக்கள் மறந்து விடமுடியாது.
தமிழர்களாகிய நாங்கள் கலை கலாசார பண்பாடுகளைப் பேணி வருகின்ற அதேவேளை சிலர் பேரினவாத கட்சிகளுக்கு பின்னாலும், துணை போகின்றவர்களும். இருக்கின்றார்கள் என்ற சோகமான நிலையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. எனவே இந்த சோக நிலையை இனியாவது உணர்ந்து தமிழர்கள் என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை எமது மக்கள் அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment