மட்டக்களப்பு லக்கி விளையாட்டு கழகத்தின் 17 வருட நிறைவு விழாவும் லக்கி
கழக கீதம் வெளியீட்டு நிகழ்வும் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.
தாச்சி சிவாவின் இயக்கத்தில் தீபாராஜ் தயாரித்துள்ள இந்த பாடலுக்கு
விதுசான் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை திரைப்பட பாடலாசிரியர் கவிஞர்
பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.
சூப்பர் சிங்கர் சந்தோஷ் ஹரிஹரன் விதுசான் ஆகியோர் பாடலை இணைந்து
பாடியுள்ளனர்.இந்த பாடலில் லக்கி விளையாட்டு கழக வீரர்கள் நடித்துள்ளனர்.
பாடலின் இறுவட்டை இசையமைப்பாளர் விதுசான் வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனா்.
0 Comments:
Post a Comment