அம்பாறை மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் பீ.எச்.பியசேனவின் ஊடக இணைப்பாளர் எம்.ஐ.எம்.றியாஸ் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு அமைப்பாளரும்
கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கிமின் கொழும்பு
இல்லத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனவின் ஊடக இணைப்பாளராக
செயற்பட்ட ஊடகவியலாளரும் அதிபருமாகிய எம்.ஐ.எம்.றியாஸ் முஸ்லிம்
காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மு.காவின் உயர்பீட உறுப்பினர் யூ.எல்.வாஹிட், அட்டாளைச்சேனை
பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மட் கலீல் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
0 Comments:
Post a Comment