9 Feb 2015

தண்டவாளத்தில் படுத்திருந்தவர் ரயில் மோதி பலி

SHARE
மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலே இவர்கள் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கையடக்க தொலைபேசியில் பாடலை இரசித்தபடி தண்டவாளத்தில் படுத்திருந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர் 17 வயதுடைய செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த சரவணபவன் சங்கீதன் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 15 வயதுடைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: