காலம் காலமாக இலங்கையில் நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளின் பின்னணியில்
கல்விசார் செயற்பாடுகளே தாக்கத்தை ஏற்படுத்தின. பல்கலைக் கழகக் கல்வி முதல்
பாடசாலைக் கல்வி வரை தோன்றிய முரண்பாடுகளே இவற்றுக்கெல்லாம் முழுக்காரணம்.
தற்போதும்கூட பாடசாலைப் பாடவிதான செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படுகின்ற
திரிபுகளும், உண்மைக்குப் புறம்பான வெளியீடுகளும் இன்னும் இன்னும்
முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும்.
அரசியல் ரீதியாக அல்லாது தமிழ்பேசும் கல்விப்புலம் சார்ந்தவர்களோடு
புதிய அரசாங்கம் நல்லெண்ண முயற்சியாக பேசவேண்டும். அதுவும் நடைபெறவுள்ள
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நடைபெற வேண்டுமென்று இலங்கைத் தமிழர்
ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிபர்களும், ஆசிரியர்களும்
எமது வேண்டுகோளை ஏற்று தமது முழுப் பங்களிப்பினையும் செய்துள்ளனர். அதனை
அளிக்கப்பட்ட வாக்கு வீதங்களும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வடக்கு,
கிழக்கு, மலையகம் உள்ளிட்ட கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, அழைத்து அரசாங்கம்
வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த
வேண்டிய கடப்பாட்டில் உள்ளதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி
நிற்கின்றது.
0 Comments:
Post a Comment