மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள
சித்தாண்டியில் சந்தணமடுவில் மண் அகழ்வை தடுப்பதில் செயற்பட்ட எஸ்.முரளி
என்னும் இளைஞரை தாக்கியமை காரணமாக கோபமடைந்த மக்கள் சித்தாண்டி
சித்திரவேலாயுதர் ஆலயத்தின் முன் ஒன்று கூடி மண் அகழ்வை நிறுத்துமாறும்,
தாக்கியரை கைது செய்யுமாறு கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதன்போது சித்தாண்டி சந்தணமடு ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்வையும், சுற்றுச் சூழல் தரிசு நிலமாதலையும் தடுத்தல், இதுதானா நல்லாட்சி பொலிஸே உறுதி செய், பொலிஸாரே குற்றாவளிக்கு தண்டனை வழங்கு, மண் அகழ்வதற்கு அரச அதிகாரிகளே துணை போகாதீர்கள், பொலிஸாரே மக்களின் பாதுகாப்பை உறுதி செய், சட்டவிரோதமான மண் குழுவை கைது செய் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவ்விடத்திற்கு அவசரமாக விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கோரிக்கை ஏற்று அங்கு பிரசன்னமாமாகிருந்த ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஏ.எஸ்.பி., பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் பேச்சுவார்த்தையை மேற்கொண்டார்.
இதன் அடிப்படையில் தாக்குதல் மேற்கொண்டவரை உடனடியாக கைது செய்வதற்கும், இனிமேல் இவ்வாறான சம்பவம் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினருக்கு உறுதியளித்ததால், இதன் பின் பொதுமக்களிடம் மக்களது இக்கோரிக்கை சார்பாக நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உறுதி வழங்கியமையடுத்து ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.
பின் பாராளுமன்ற உறுப்பினர் செங்கலடி பிரதேச செயலகத்துக்கு சென்று உரிய அதிகாரியை சந்தித்து மண் அகழ்வு நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சந்தணமடு ஆற்றில் கடந்த அரசாங்க காலத்தில் முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட குழுவினர் மண் அகழ்வில் ஈடுபட்டனர். இவ் மண் அகழ்வை எதிர்த்து அப்பகுதி மக்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
இவ்விடயமாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதுசார்பாக விபரங்களை பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பாராளுமன்றத்திலும் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இவ்வேளை மாவட்ட அபிவிருத்திக் குழு, பிரதேச அபிவிருத்திக் குழு போன்றவற்றிலும் பிரச்சனையை கொண்டு வந்து மண் அகழ்வை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்ட போது மாவட்ட கனிய வள பணிப்பாளரினதும், கனிய வள அமைச்சினதும் அனுமதிடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் ஒருவரின் ஒத்துழைப்புடனும் சட்டவிரோத மண் அகழ்வு நடைபெற்றது.
சில அரச அதிகாரிகளும் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கினர். மண் அகழ்வு குழு நேரடியாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் வழிகாட்டலில் செயற்பட்டது.
இவ்வேளை அரசாங்க மாற்றம் ஏற்பட்ட பின்பும் இம்மண் அகழ்வு குழு இரவு பகலாக பல வாகனங்களை கொண்டு சென்று மண் அகழ்வில் ஈடுபட்டதால் மீண்டும் மண் அகழ்வை நிறுத்துமாறு கோரி சித்தாண்டி மக்கள் ஆர்ப்பாட்ட செய்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகள் தலையிட்டு இதனை தற்காலியமாக தடுத்து தொடர்ந்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வேளை இம்மண் அகழ்வை தடுப்பதில் செயற்பட்ட எஸ்.முரளி என்னும் இளைஞரை ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு சிலர் சென்று பொல்லாலும், சில கூரான ஆயுதங்களாலும் தாக்கி உள்ளனார்.
இவர் 12 தையலுடன் படுகாயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மக்கள் மண் அகழ்வை நிறுத்துமாறும், முரளியை தாக்கியவரை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இப்பகுதி கடந்த காலங்களில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகும். இங்கு உள்ள 8000க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 05 வருடங்களாக பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அங்குள்ள சந்தணமடு என்னும் ஆற்றில் மண் அகழ்வும் இவைகளுக்கு காரணமாக இருந்தது.

0 Comments:
Post a Comment